சாண்டி படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்கில் கெளதம் மேனன்!

வியாழன், 25 பிப்ரவரி 2021 (19:45 IST)
சாண்டி படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட்லுக்கில் கெளதம் மேனன்!
பிக்பாஸ் பிரபலம் மற்றும் நடன இயக்குனர் சாண்டி 3:33 என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களான சரவணன், ரேஷ்மா உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வெளியாகியுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள கவுதம் மேனனின் போஸ்டர் அதில் அட்டகாசமாக இடம்பெற்றுள்ளது. இந்த படத்தில் கவுதம் மேனன் துப்பறியும் நிபுணராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்த்தக்கது.
 
இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சந்துரு என்பவர் இயக்கியிருக்கும் இந்த படத்தை ஹர்ஷவர்த்தன் ரமேஷ்வர் என்பவர் இசையமைத்துள்ளார் இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்