ஜி.வி.பிரகாஷின் புதிய பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் !

திங்கள், 22 பிப்ரவரி 2021 (20:39 IST)
இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜிவி.பிரகாஷ் நடித்துள்ள வணக்கம்டா மாப்ள என்ற படத்தில் ஃப்ரஸ்ட்லுல் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் சிவா மனசில சக்தி, ஒருகல் ஒரு கண்ணாடி,பாஸ் என்கிர பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

கடைசியாக இவர் இயக்கியிருந்த படங்கள் ரசிகர்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில், தற்போது இவர் இயக்கத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி.பிரகாஷ்குமார் நடித்துள்ள படம் வணக்கம்டா மாப்ள. ரஜேஷின் வழக்கமான காமெடி ஜார்னனில் இப்படம் உருவாகியிருப்பதாகத் தெரிகிறது. பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இன்று இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வணக்கம் டா மாப்ள என்ற கலக்கலான தலைப்பு இடம்பெற்றுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் இப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படத்தின் முதல் பாட ல் விரையில் ரிலிசாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்