பாகுபலி வசூலை ஒரே வாரத்தில் இந்த படம் முறியடிக்கும் – ஓபன் சேலஞ்ச் விடும் தயாரிப்பாளர்!

சனி, 5 டிசம்பர் 2020 (16:02 IST)
ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ஆர் ஆர் ஆர் திரைப்படம் பாகுபலி படத்தின் வசூலை ஒரே வாரத்தில் கடக்கும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவில் இதுவரை வெளியான படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை செய்த படம் என்றால் அது பாகுபலி 1 மற்றும் 2 தான். இந்த இரு படங்களே இதுவரை வசூல் சாதனை நிகழ்த்திய படங்களாக உள்ளன. இந்நிலையில் இப்போது ராஜமௌலி இயக்கும் ஆர் ஆர் ஆர் திரைப்படம் அந்த வசூல் சாதனையை ஒரே வாரத்தில் முந்தும் என ஆர் ஆர் ஆர் படத்தின் தம்மரட்டி பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

ராஜமௌலி இயக்கும் இந்த படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்