ஒரே ஒரு சண்டைக்காட்சிக்காக 50 நாட்கள் – ராஜமௌலியின் பிரம்மாண்ட திட்டம்!

புதன், 2 டிசம்பர் 2020 (10:51 IST)
ஆர் ஆர் ஆர் படத்தின் ஒரு சண்டைக்காட்சியை 50 நாட்கள் படமாக்கியுள்ளார் இயக்குனர் ராஜமௌலி.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெறும் ஒரு சண்டைக்காட்சிக்காக 50 நாட்களை படம்பிடித்துள்ளது படக்குழு. இந்த சண்டைக்காட்சியில் ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரண் ஆகிய இரு கதாநாயகர்களுமே கலந்துகொண்டுள்ளனர். படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்