தனுஷுடன் ரோமன் ஃபியோரி... சூப்பர் வைரலாகும் புகைப்படம்...!

சனி, 2 மே 2020 (16:35 IST)
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில     ஜகமே தந்திரம் படம் உருவாகி வருகிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன், சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணத்தால் படவேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுருளி என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் இப்படத்தில் நடைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்கச்செய்தது.


இப்படம் நேற்று வெளியவிருந்ததை எண்ணி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வருத்தத்துடன் ட்விட் போட்டிருந்தார். இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் கிடா மீசையுடன் புகழ் பெற்ற தியேட்டர் ஆர்ட்டிஸ்டான ரோமன் ஃபியோரியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சிறந்த எழுத்தாளரான ரோமன் ஃபியோரி ஜகமே தந்திரம் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்