பாசிட்டிவ் ரிவ்யூஸ்களைக் குவிக்கும் பாரிஸ் ஜெயராஜ்!

வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (14:47 IST)
இன்று ரிலீஸாகியுள்ள படங்களில் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

நடிகர் சந்தானம் நடிப்பில் இயக்குநர் ஜான்சன். கே இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பாரிஸ் ஜெயராஜ். இப்படத்தை கே.குமார் என்பவர் தயாரித்துள்ளார்.  இப்படம் காமெடி ஜர்னலில் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. கானா பாடகராக இந்த படத்தில் சந்தானம் நடித்துள்ள நிலையில் சந்தோஷ் நாராயணின் இசை பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம் இன்று ரிலீஸான நிலையில் காலையில் இருந்து படம் பார்த்த ரசிகர்களின் பாஸிட்டிவ் கருத்துகளையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. சந்தானம் & ஜான்சன் கூட்டணியில் உருவான ஏ1 திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்