விஜய் தேவரகொண்டாவின்’’ லைகர் ’’படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வியாழன், 11 பிப்ரவரி 2021 (22:12 IST)
சிலஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா இவருக்கு  தென்னிந்தியாவில் ரசிகைகள் அதிகம்.

இவர் தமிழில் நேரடியாகத் நடித்த டியர் காம்ரேட், நோட்டா,வேர்ல்ட் பேமஸ் லவ்வர் போன்ற படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில், சமீபத்தில்  விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகிவரும் லைகர் படத்தின் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தைப் பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கிவருகிறார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். இவர்களுடன் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், விஹு ரெட்டி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர்.
இப்படம் காதலையும் விளையாட்டையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இப்படம், இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ளது.
இந்நிலையி; லைகர் படம் செப்டம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளதாவது:

லைகர் படம் செப்டம்பர் -9ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் ஒரே நேரத்தில் திரையரங்கில் வெளியாகவுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள ரசிகர்கள் லைகர் என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

இப்படத்தின் போஸ்டருக்கு ரசிகர்கள் பீர் அபிஷேகம் செய்தனர். இது குறித்த வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்