இனி ஸ்டார் நடிகர்கள் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை – திருப்பூர் சுப்ரமண்யம் பேச்சு!

வியாழன், 10 செப்டம்பர் 2020 (16:46 IST)
ஓடிடியில் படங்கள் ரிலீஸ் ஆவதின் மூலமாக ஸ்டார் நடிகர் உருவாக வாய்ப்பில்லை என திருப்பூர் சுப்ரமண்யம் எனும் விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பதும், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’டாக்டர்’ மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’அயலான்’ என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் ’டாக்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெறும் 15 நாட்கள் மட்டுமே இருப்பதாகவும் விரைவில் அது நடத்தி முடிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை ஓடிடியில் ரிலிஸ் செய்ய ஒரு முன்னணி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. தயாரிப்பு தரப்பு எதிர்பார்க்கும் தொகையை கொடுக்கும் பட்சத்தில் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சூர்யா தன் சூரரைப் போற்று திரைப்படத்தை ஓடிடியில் ரிலிஸ் செய்வதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதுகுறித்து விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமண்யம் ‘படங்கள் திரையரங்குகளில் ரிலிஸ் ஆவதால்தான் சிவகார்த்திகேயன் போன்ற ஸ்டார்கள் உருவானார்கள். ஓடிடியில் படங்களை ரிலீஸ் செய்து எந்த ஸ்டாரும் உருவாக முடியாது’ எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்