காவாலா பாடலை வைத்து கோடிகளில் அள்ளும் தமன்னா!

சனி, 4 நவம்பர் 2023 (11:19 IST)
சில மாதங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் மற்றும் தமன்னா ஆகியோர் நடிக்கும் ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிளான காவாலா பாடல் ரிலீஸானது. இந்த பாடலில் தமன்னாவின் டான்ஸ் இணையத்தில் அதிகம் கவனம் பெற்றது. அனிருத் இசையில் அருண்ராஜா காமராஜ் இந்த பாடலை எழுதியிருந்தார்.

இதையடுத்து பலரும் காவாலா பாடலில் இடம்பெற்றிருந்த டான்ஸ் மூவ்மெண்ட்களை திரும்ப செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களாக அதிகளவில் வெளியிட்டு வருகின்றன. தமன்னாவும் அந்த பாடலுக்கான தன்னுடைய ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த பாடல் இணையத்தில் 10 கோடி பேர்களுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பாடலில் தமன்னாவின் நடனம் பிரபலம் அடைந்ததை அடுத்து நிறைய திருமண விழாக்களில் இந்த பாடலுக்கு நடனமாட தமன்னாவுக்கு அழைப்புகள் குவிந்து வருகிறதாம். அதன் மூலம் பல கோடி ரூபாய் வருவாயை ஈட்டி வருகிறாராம் தமன்னா.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்