ஜெயிலர் 2 படத்துக்கு மாஸான டைட்டிலைப் பிடித்த நெல்சன்… !

vinoth

திங்கள், 15 ஏப்ரல் 2024 (08:26 IST)
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ் குமார், விநாயகன் மற்றும் தமன்னா ஆகியோர் நடித்த ஜெயிலர் படம் ரிலீஸாகி பெருவெற்றி பெற்றது. படத்தின் விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், வசூலில் கலக்கி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதனால் உடனடியாக ஜெயிலர் 2 உருவாகும் என தகவல்கள் பரவின.

ரஜினியும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்பட்டது.  இப்போது ரஜினி வேட்டையன் மற்றும் லோகேஷ் இயக்கும் ரஜினி 171 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு ஜெயிலர் 2 தொடங்கும் என சொல்லப்பட்டது. அதையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கும் என சொல்லப்பட்டது.

இப்போது திரைக்கதை அமைக்கும் பணிகளில் நெல்சன் ஈடுபட்டு வரும் நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்த படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு ‘ஹுக்கும்’ என நெல்சன் டைட்டில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‘அலப்பற கெளப்புறோம்’ பாடலில் இந்த வார்த்தையை ரஜினி சொல்வது போல அமைக்கப்பட்டிருக்கும். அதையே இப்போது இரண்டாவது பாகத்துக்கு டைட்டிலாக வைக்க உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்