சிம்புவுடன் ஓராண்டுக்குப் பின்னரே திரைப்படம்! மிஷ்கின் வெளியிட்ட தகவல்!

வியாழன், 4 ஜூன் 2020 (07:25 IST)
சிம்பு நடிக்கும் படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்குவதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இயக்குனர் மிஷ்கின் சிம்புவுக்கு ஒரு கதை சொல்லியுள்ளார். அந்த கதை அவருக்கும் பிடித்துப் போக, விரைவில் இந்த கூட்டணி படம் இயக்கும் என சொல்லப்பட்டது. இந்த படத்தில் வடிவேலுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் இந்த படம் ஓராண்டுக்குப் பின்னரே தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது. அதற்கு முன்னால் மிஷ்கின் அருண் விஜய்யை வைத்து அஞ்சாதே இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார். சிம்பு தான் ஒத்துக்கொண்ட படங்களை முடித்துக் கொண்டு வந்து மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்