விஜய் படத்தில் நடிகராக மிஷ்கின் – வைரலாகும் விண்ட்டேஜ் புகைப்படம்!

வியாழன், 28 மே 2020 (09:03 IST)
இயக்குனர் மிஷ்கின் விஜய் நடிப்பில் வெளியான யூத் திரைப்படத்தில் நடித்துள்ளதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே மற்றும் நந்தலாலா ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய முத்திரையைப் பதித்தவர் இயக்குனர் மிஷ்கின். மேலும் அவர் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடிகராகவும் நடித்து பாராட்டுகளைப் பெற்ற நிலையில் இப்போது பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவர் உதவி இயக்குனராக இருந்தபோதே சில படங்களில் நடித்துள்ளார் என்பது யாருக்கும் தெரியாத விஷயம்.

மிஷ்கின் இயக்குனர் வின்செண்ட் செல்வா மற்றும் கதிர் ஆகியவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். வின்செண்ட் செல்வா இயக்கிய யூத் படத்தில் வரும் ஒரு பாடலில் மிஷ்கின் நடித்துள்ளார். மொட்டைத் தலையுடன் தாடி வைத்திருக்கும் மிஷ்கினைக் கண்டுபிடிப்பதே கடினமாக இருக்கும் புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது. அதே போல காதல் வைரஸ் படத்திலும் மிஷ்கின் ஒரு கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்