சிஎஸ்கே போட்டியின் இடையே ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலர்: ஆர்ஜே பாலாஜி

வெள்ளி, 23 அக்டோபர் 2020 (19:14 IST)
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் வரும் தீபாவளி அன்று ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. இந்த செய்தி இன்று ஹாட்ஸ்டார் மூலம் உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்க ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டுள்ளார் முதல்கட்டமாக இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் செய்ய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த படத்தின் டிரைலர் அக்டோபர் 25-ஆம் தேதி வெளியாக உள்ளது. அன்றைய தினம் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்படும்போது இடையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
தீபாவளி அன்று வெளியாகும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றும், குறிப்பாக இது பக்தி படம் என்பதால் பெண்களின் வரவேற்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்