நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்

வியாழன், 22 அக்டோபர் 2020 (18:49 IST)
விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய ’நானும் ரவுடிதான்’ திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 5 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். தனது தயாரிப்பில் நயன்தாரா நடிக்க உள்ள ’நெற்றிக்கண்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்
 
தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ’நெற்றிக்கண்’ பஸ்ட் லுக் போஸ்டர் அவர் கூறியபடியே சற்றுமுன் வெளியாகியுள்ளது. நயனின் தலையில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட உள்ள இந்த ஃபர்ஸ்ட்லுக் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
 
கொரியன் திரைப்படமான ‘பிளைண்ட்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமான இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ‘அவள்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
விபத்தில் சிக்கும் ஒரு பெண் காவல்துறை அதிகாரி எதிர்பாராதவிதத்தில் தனது பார்வையை இழக்கின்றார். இந்த நிலையில் இவர் ஒரு முக்கிய வழக்கில் சாட்சி சொல்ல வருகிறார். இவர் சொல்லும் சாட்சியால் ஏற்படும் விபரீதங்கள் என்ன? என்பதுதான் இந்த படத்தின் கதை

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்