சூட்டோடு சூடாக ஓடிடியுலும் ரிலீஸாகிறதா மாஸ்டர்? அதுவும் ஜனவரியிலா?

செவ்வாய், 12 ஜனவரி 2021 (10:30 IST)
மாஸ்டர் படம் ஒடிடியிலும் ஜனவரி மாதமே ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள திரைப்படமாக மாஸ்ட திரைப்படம் உள்ளது. லோகேஷ் இயக்கியுள்ள அந்த  திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படம் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதால் இருக்கும் எல்லா திரையரங்குகளிலும் மாஸ்டர் திரைப்படமே ரிலீஸ் செய்யலாம் எனத் திரையரங்க உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நாளை முதல் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆனால் உலகின் பல பாகங்களில் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதாலும், கொரோனா அச்சம் காரணமாக திரையரங்குக்கு வர விரும்பாதவர்களுக்கும் பார்க்கும் விதமாக ஜனவரி 26 ஆம் தேதியே மாஸ்டர் படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்