திரையரங்க உரிமையாளர்கள் கண்டனம் – ஓடிடி ரிலீஸில் ஈஸ்வரன் பின்வாங்கல்!

செவ்வாய், 12 ஜனவரி 2021 (10:02 IST)
ஈஸ்வரன் படம் திரையரங்குகளில் வெளியாகும் அதே நாளில் ஓடிடியிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட முடிவில் இருந்து படக்குழு பின் வாங்கியுள்ளது.

சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொங்கல் தினத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளியாவதால் ஈஸ்வரன் திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டது. அதுமட்டுமின்றி மாஸ்டர் திரைப்படத்தை வாங்கவே பல திரையரங்கு உரிமையாளர்கள் முன்னுரிமை கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ஈஸ்வரன் படத்தை திரையரங்குகளில் வெளியிடும் அதே நாளில் ஓடிடியிலும் வெளியிட படக்குழு முடிவு செய்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அப்படி ரிலீஸ் செய்தால் திரையரங்குகளில் ஈஸ்வரன் படத்தை ரிலீஸ் செய்யமாட்டோம் என திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்போது ஈஸ்வரன் படக்குழு ஓடிடி ரிலீஸ் முடிவில் இருந்து பின் வாங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்