லாரன்ஸால் தனுஷ் படத்துக்கு வந்த புதிய சிக்கல் – விட்டுக்கொடுக்க போவது யார்?

வெள்ளி, 6 நவம்பர் 2020 (17:23 IST)
நடிகர் தனுஷ் இயக்க வுள்ள படத்துக்கு நான் ருத்ரன் படத்துக்கு லாரன்ஸ் படத்தால் ஒரு சிக்கல் உருவாகியுள்ளது.

நடிகரான தனுஷ், ‘பவர் பாண்டி’ மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்றும் பெயரெடுத்தார். எனவே, அவர் அடுத்து இயக்கும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கப் போவதாக அறிவித்தது. ‘பாகுபலி’ போன்ற சரித்திரக்கதையைத்தான் அவர் படமாக்கப் போவதாக சொன்னார்கள். பெரிய ஹீரோ ஒருவர் நடிக்க, தனுஷும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தேனாண்டாள் பிலிம்ஸ் பணப் பிரச்னையில் சிக்கியிருப்பதால், இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க இருக்கிறது. 400 வருடங்களுக்கு முன்பு நடக்கும் கதை இது. இந்தப் படத்துக்கு ‘நான் ருத்ரன்’ எனப் பெயர் வைத்திருக்கிறார்களாம்.

இந்நிலையில் இப்போது லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்துக்கு ருத்ரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தனுஷ் படத்தின் டைட்டிலை இதுவரை பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து இப்போது தனுஷ் மீண்டும் அந்த படத்தை தொடங்கும் போது வேறு தலைப்பை வைக்க வேண்டும். அல்லது இன்னும் படப்பிடிப்பே ஆரம்பிக்காத லாரன்ஸ் படக்குழுவினர் தனுஷுக்காக அந்த தலைப்பை விட்டுத்தர வேண்டும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்