தனுஷிடம் 50 நாட்களைக் கேட்ட இயக்குனர்… கொடுத்தால் உடனே படப்பிடிப்பு!

திங்கள், 2 நவம்பர் 2020 (17:17 IST)
நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்க உள்ள படத்துக்காக 50 நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளாராம் இயக்குனர்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் D 43 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தில் நாயகியாக நடிக்க மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்காக நீண்ட நாட்களாக திரைக்கதை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தார் கார்த்திக் நரேன்.

இந்நிலையில் இப்போது எல்லா பணிகளும் முடிந்துள்ள நிலையில் தனுஷிடம் 50 நாட்கள் கால்ஷீட் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு தனுஷ் சம்மதித்து தேதிகளை ஒதுக்கும் பட்சத்தில் உடனடியாக ஷூட்டிங் செல்ல தயாராக இருக்கிறாராம் கார்த்திக் நரேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்