வாடிவாசல் படம் என்ன ஆனது? தாணு அளித்த விளக்கம்!

வியாழன், 21 ஜனவரி 2021 (08:03 IST)
வாடிவாசல் திரைப்படம் தொடங்கப்படுவதில் என்ன சிக்கல் என தயாரிப்பாளர் தாணு விளக்கம் அளித்துள்ளார்.

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் பல சர்ச்சைகளுக்குப் பிறகு தீபாவளிக்கு ஓடிடியில் ரிலிஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் அடுத்து அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார். அதற்கடுத்தும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

அதே போல வெற்றிமாறனும் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதனால் வாடிவாசல் என்ன ஆனது என ரசிகர்கள் ஆர்வமாக சமூகவலைதளங்களில் கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர் தாணு தரப்பில் ஒரு விளக்கம் வெளியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதன் படி ‘படத்தின் படப்பிடிப்புக்காக 1000க்கும் மேற்பட்ட ஜூனியர் நடிகர்கள் தேவைப்படுவார்கள் என்பதால், கொரோனா அச்சுறுத்தல் இருக்கும் இந்த நேரத்தில் படத்தைத் தொடங்குவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்