மனிதர் கடவுளாக முடியும்… அவர் வாழ்ந்து காட்டியிருக்கிறார் - நடிகர் சூர்யா டுவீட்

புதன், 20 ஜனவரி 2021 (23:17 IST)
மனிதர் கடவுளாக முடியும் என்பதை மருத்துவர் அம்மா வி. சாந்தா அவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார் என நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணர், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மற்றும் சமூக சேவகியான டாக்டர் சாந்தா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். 

வாழும் அன்னை தெரசா வாழ்ந்து கொண்டிருந்த சாந்தா அவர்களின் உயிர் இழப்பு மனித குலத்திற்கே பேரிழப்பு என பொதுமக்கள் ,பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில்,  நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: கடவுள் மனிதராக அவதாரம் எடுப்பதாக இதிகாசங்கள் கூறுகின்றன. மனிதர் கடவுளாக முடியும் என்பதை மருத்துவர் அம்மா வி. சாந்தா அவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அதற்கு காலத்தின் சாட்சி.. மனம் உருகும் அஞ்சலி.. #AdyarCancerInstitute #DrShantha எனத் தெரிவித்துள்ளார்.

கடவுள் மனிதராக அவதாரம் எடுப்பதாக இதிகாசங்கள் கூறுகின்றன. மனிதர் கடவுளாக முடியும் என்பதை மருத்துவர் அம்மா வி. சாந்தா அவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அதற்கு காலத்தின் சாட்சி.. மனம் உருகும் அஞ்சலி..#AdyarCancerInstitute #DrShantha

— Suriya Sivakumar (@Suriya_offl) January 20, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்