ரஹ்மான் இசையில் ஸ்ருதிஹாசன் குரலில் காதலிக்க நேரமில்லை பாடல் பதிவு!

vinoth

வெள்ளி, 1 மார்ச் 2024 (15:30 IST)
ஜெயம் ரவி நடிக்கும் 33 வது திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கி வருகிறார். இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்துக்கு பழைய ஹிட் படத்தின் டைட்டிலான ‘காதலிக்க நேரமில்லை’ என்ற தலைப்பை வைத்துள்ளனர்.

ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, மனோ,  லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை தற்போது பதிவு செய்துள்ளனர். இந்த பாடலை சினேகன் எழுத ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்