ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை படத்தின் ரிலீஸ் ப்ளான்!

vinoth

புதன், 28 பிப்ரவரி 2024 (07:16 IST)
ஜெயம் ரவி நடிக்கும் 33 வது திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கி வருகிறார். இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்துக்கு பழைய ஹிட் படத்தின் டைட்டிலான ‘காதலிக்க நேரமில்லை’ என்ற தலைப்பை வைத்துள்ளனர்.

ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, மனோ,  லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் மொத்தமாக நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இந்த படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்