ஷூட்டிங்கில் விபத்து; வெள்ளத்தில் மூழ்கிய ஜாக்கிசான்! – படப்பிடிப்பில் பரபரப்பு

செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (14:01 IST)
பிரபல ஹாலிவுட் ஆக்‌ஷன் நடிகரான ஜாக்கிசான் படப்பிடிப்பின் போது வெள்ளத்தில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஹாலிவுட் ஆக்‌ஷன் நடிகரான ஜாக்கிசான் தனது வாழ்வை ஹாங்காங் சினிமாவிலிருந்து தொடங்கியவர். தனது பிரத்யேகமான காமெடி மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டை சாகசங்களால் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ள ஜாக்கி தனது 66வது வயதிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது ஜாக்கிசான் வேன்கார்ட் என்ற ஹாலிவுட் ஆக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சி ஒன்று சீனாவில் படமாக்கப்பட்டு வருகிறது. மியா முகி என்ற நடிகையுடன் நீரில் செல்லும் பைக்கில் பயணிக்கும் ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது ஜாக்கிசான் ஓட்டிய தண்ணீர் பைக் குப்புற கவிழ்ந்ததால் இருவரும் நீரில் மூழ்கினார். சில வினாடிகளில் மியா முகி வெளியே வந்து விட்டார். ஆனால் கிட்டத்தட்ட நீரில் மூழ்கி 1 நிமிடத்திற்கும் மேலாக ஜாக்கிசான் வெளியே வராததால் உடனடியாக அவரது பாதுகாவலர்கள் மற்றொரு படகில் சென்று அவரை மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் படப்பிடிப்பு குழுவினரை மட்டுமல்லாது ஜாக்கிசான் ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதிர்ஷ்டவசமாக ஜாக்கிசான் உயிர் பிழைத்ததுடன், தயாரிப்பாளர்கள் படப்பிடிப்பை நிறுத்த சொல்லியும் தவிர்த்து படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டு நடித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்