கொரியன் படத்துல வர ஹீரோ மாதிரி இருக்கீங்க... கிண்டலுக்குள்ளான கேத்ரின் தெரெசா!

செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (10:15 IST)
'மெட்ராஸ்' படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை கேத்ரின் தெரசா. அந்த படத்திற்கு பின்னர் கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு-2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் நடிக்கிறார். மெட்ராஸ் படத்திற்கு பிறகு கவர்ச்சி கன்னியாக வலம் வரும் இவர் சமீபத்தில் தமிழில் வெளியான 'கலகலப்பு 2' படத்திலும் கவர்ச்சி காட்டி அசத்தினார்.ஆதலால் , தமிழ் ரசிகர்களை விட இவருக்கு தெலுங்கு ரசிகர்களே அதிகம். காரணம், அங்கு அம்மணி கவர்ச்சிக்கு கண்டிஷன் ஏதும் இல்லாமல் தாராளம் காட்டி நடிப்பார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகியுள்ளார். இதற்கு லைக்ஸ் விட கமெண்ட்ஸ் தான் மள மளவென குவிகிறது. கொரியன் பட ஹீரோ ராயப்பேட்டையில் சுற்றிவருவது போல் உள்ளது என பங்கமாக கலாய்த்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்