பாஜகவில் சேரப்போகிறாரா கஸ்தூரி? டிவிட்டால் பரபரப்பு!

செவ்வாய், 24 நவம்பர் 2020 (16:45 IST)
நடிகை கஸ்தூரி தன்னை ஒரு அரசியல் கட்சியில் சேர அழைப்பு விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறார்.

முன்னாள் நடிகையான கஸ்தூரி சமூக அக்கறை சார்ந்த விஷயங்களில் தனது குரலை அவ்வப்போது பதிவு செய்து வருபவர். அதே போல சினிமா ரசிகர்களைப் பற்றியும் கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வார். அதே போல திமுக மற்றும் பெரியாரிய இயக்கங்களையும் தொடர்ந்து விமர்சனம் செய்துவருகிறார். அதனால் அவரை இப்போதே பலரும் அவர் பாஜக ஸ்லீப்பர் செல் என்று சொல்லப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் கஸ்தூரி இப்போது ‘நான் இதுவரை எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை. ஆனால் என்னை மதித்து ஒரு அரசியல் கட்சி என்னை அரசியலுக்கு அழைத்துள்ளது. நான் அதில் சேர்ந்தாலும் சேருவேன். காரணம் பகுத்தறிவுதான்’ எனக் கூறியுள்ளார். இதை வைத்து அவரை அழைத்த கட்சி பாஜக தான் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்