விஜய் படத்தில் தீபிகா படுகோன் – சன் பிக்சர்ஸை சைலண்ட் ஆக்கிய நெல்சன்!

செவ்வாய், 24 நவம்பர் 2020 (16:34 IST)
விஜய் அடுத்து நடிக்க உள்ள விஜய் 65 படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.

மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை இயக்க இருந்த ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார். இதனால் இப்போது அந்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த பட்டியலில் பல இயக்குனர்கள் பெயர் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த இயக்குனர் யார் என்பது இப்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்போது விஜய் 65 இயக்குனர் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனரான நெல்சன்தான் அந்த படத்தின் இயக்குனராக இருக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படம் காமெடி அம்சங்கள் நிறைந்த படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. நீண்ட நாட்களாக முழு நகைச்சுவை படத்தில் விஜய் நடிக்கவில்லை என்பதால் இந்த கதைக்கு உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.

இந்நிலையில் இந்த படம் முழுக்க காமெடியாக இருப்பதால் தயாரிப்பு நிறுவனம் வியாபாரம் செய்ய முடியுமா என யோசிக்க, அதற்காக படத்தை பிரம்மாண்டமாக்க பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோனை கதாநாயகியாக்கலாம் என நெல்சன் யோசனைக் கொடுத்து அதற்கான பேச்சுவார்த்தையில் இப்போது ஈடுபட்டு வருகிறார்களாம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்