எலும்பும் தோலுமாய் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய நடிகை!

வியாழன், 13 மே 2021 (15:22 IST)
நடிகை ஹன்சிகாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி.  குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான மஹாவில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.  இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்து வந்தார். அந்த படம் முடிந்த நிலையில் அவர் கைவசம் வேறுபடங்கள் இல்லை என்றானது.

இந்நிலையில் தனது தோற்றத்தை மாற்ற விரும்பிய ஹன்சிகா, உடல் எடையை வெகுவாகக் குறைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார். ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு நெஞ்சு எலும்பெல்லாம் தெரியும் அவரின் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதைப் பார்த்த பலரும் ஹன்சிகாவா இது என்று ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்