பெத்த தாயா இருந்தாலும் கடமைன்னு வந்துட்டா..! – கடையை காலி செய்த நகராட்சி ஊழியர்

புதன், 12 மே 2021 (08:24 IST)
மகாராஷ்டிராவில் பொதுமுடக்க விதிகளை மீறி காய்கறி கடை நடத்திய தாயின் கடையை நகராட்சி ஊழியரான மகனே காலி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள பதார்டி டவுன் மெயின் பஜார் பகுதியை சேர்ந்தவர் ரஷீத் ஷேக். நகராட்சி ஊழியரான இவர் சமீப காலமாக கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட பறக்கும் படை பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.

அவ்வாறாக கொரோனா விதிமுறைகள் பின்பற்றுவதை சோதனை செய்யும் பணியில் அவர் ஈடுபட்டிருந்த போது அவரது தாய் வீட்டின் அருகே ஒதுக்குபுறமாக காய்கறி கடையை வைத்து நடத்தி வந்துள்ளார். இதை கண்ட ரஷீத் கொரோனா விதிமுறைகளின்படி ஓரிடத்தில் கடை போன்று அமைத்து காய்கறிகளை விற்பது தடை செய்யப்பட்டது என்பதால் தாயார் என்றும் பாராமல் அவரது காய்கறி கடையை காலி செய்ததுடன், காய்கறிகளை அள்ளி நகராட்சி வண்டில் கொட்டினார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் ரஷீத் ஷேக்கிற்கு பலரும் கடமையை கட்டுக்கோப்பாக செய்ததை பாராட்டி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்