6 வருடத்துக்குப் பின்னர் சீரியலுக்கு வரும் நடிகரின் மனைவி!

சனி, 9 ஜனவரி 2021 (16:48 IST)
நடிகர் சஞ்சீவின் மனைவி பிரீத்தி 6 வருடங்களுக்கு பிறகு தங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கப் போவதாக சன் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

நடிகர் விஜய்யின் நண்பர் சஞ்சீவ். இவர் கிட்டதட்ட சின்னத்திரை சூப்பர் ஸ்டார் என சொல்லலாம். அந்த அளவுக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து வருகிறார். இவரின் மனைவியான பிரித்தியும் ஒரு பிரபலமான சீரியல் நடிகைதான்.

கிட்டத்தட்ட 6 வருடங்களாக சன் தொலைக்காட்சியில் எந்த ஒரு தொடரிலும் பிரீத்தி நடிக்கவில்லை. இப்போது அந்த குறையை போக்கும் பொருட்டு பிரீத்தி தங்கள் சீரியலில் நடிக்க உள்ளதாக சன் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்