மீண்டும் அந்த இயக்குனரோடா? கலக்கத்தில் தனுஷ் ரசிகர்கள்!

புதன், 24 பிப்ரவரி 2021 (15:08 IST)
தனுஷ் மீண்டும் பாலாஜி மோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் இப்போது அதிக படங்களில் நடிக்கும் நடிகர்களில் தனுஷும் ஒருவர். தமிழ், இந்தி மட்டுமில்லாமல் ஹாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் மாரி மற்றும் மாரி2 ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில் வெகு விரைவிலேயே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இவர்கள் கூட்டணியில் இதற்கு முன்னர் வெளியான மாரி, மாரி 2 ஆகிய இரு படங்களுமே தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் மூன்றாவதாக ஒரு படமா என ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்