தவறாக கொரோனா பாஸிட்டிவ் என அறிவிக்கப்பட்ட சிரஞ்சீவி… இறுதியில் வெளியான உண்மை முடிவு!

வியாழன், 12 நவம்பர் 2020 (21:05 IST)
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று இருப்பது சொல்லப்பட்ட நிலையில் மறு பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது.

சிரஞ்சீவி நடிக்க இருந்த ஆச்சார்யா திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 9 ஆம் தேதி தொடங்க இருந்தது. இந்நிலையில் படப்பிடிப்புக்கு முன்னர் சிரஞ்சீவி உள்ளிட்ட படக்குழுவினர்க்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  இதையடுத்து அவர் தன்னைத் தானே வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். மேலும் தன்னை சந்தித்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொண்டு சோதனை செய்துகொள்ளும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையடுத்து அவருக்காக ரசிகர்கள் மற்றும் சினிமா உலகினர் பிராத்தனை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று சிரஞ்சீவி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘மூன்று வெவ்வேறு மருத்துவர்கள் எனக்கு மூன்று வெவ்வேறு சோதனைகளை செய்தனர். அதில் எனக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. முந்தைய முடிவு கொரோனா சோதனையில் ஏற்பட்ட தவறுதலால் வந்திருக்கலாம். உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி.’ எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்