கார்த்தியின் ‘சுல்தான்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ்

வெள்ளி, 26 மார்ச் 2021 (19:02 IST)
கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்திற்கு இன்று சென்சார் சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.

எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர்.

முதல் படத்தைப் போல இல்லாமல் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த படமாக உருவாகியுள்ள சுல்தான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளத நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை தமிழகம் முழுவதும் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு.சொந்தமாக ரிலீஸ் செய்ய உள்ளார்.

இந்நிலையில் சுல்தான் படத்தின் டிரைலரை நேற்று முன்தினம் மாலை படக்குழு வெளியிட்டது. இந்த டிரெயிலர் மற்றும் இப்படத்திற்கு பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜை அமைத்துள்ளார் இதனால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எனவே இன்று சுல்தான் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. அதிரடி ஆக்சன் நிறைந்த இப்படத்திற்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதால் மேலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

#Sulthan hitting screens from April 2, censored UA @Karthi_Offl @iamRashmika @Bakkiyaraj_k #SulthanCensoredUA#SulthanFromApril2 pic.twitter.com/Gtus8qDPXO

— DreamWarriorPictures (@DreamWarriorpic) March 26, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்