உருவாக்கத்தில் கார்த்தி நடித்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்!

வியாழன், 25 மார்ச் 2021 (16:35 IST)
கார்த்தி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு ரிலீஸான திரைப்படம் கொம்பன். அந்த படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

சசிக்குமார் நடித்த குட்டிப் புலி மற்றும்  கார்த்தி நடித்த கொம்பன் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா, அவர் படங்களில் சாதியக் கருத்துகள் இடம்பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் அவர் படங்கள் நல்ல வெற்றியைப் பெறுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் கௌதம் கார்த்தியை வைத்து இயக்கிய தேவராட்டம் திரைப்படம் சர்ச்சைகளை ஏற்படுத்தி வெற்றி பெற்றது. அதன் பின்னர் விக்ரம் பிரபு மற்றும் லஷ்மி மேனன் ஆகியவர்களை வைத்து உருவாக்கிய புலிக்குத்தி பாண்டி திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியானது.

இந்நிலையில் இப்போது முத்தையா கார்த்திக்கு ஒரு கதை சொல்லி அவரின் சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஏற்கனவே அவர்கள் கூட்டணியில் உருவாகி வெற்றி பெற்ற கொம்பன் படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்