அப்பா மரணம் தொடர் சோகத்தில் லாஸ்லியா - யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது!

செவ்வாய், 24 நவம்பர் 2020 (14:46 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசனில் லாஸ்லியா அனைவரையும் கவர்ந்தார் என்பதும் அவருக்கு தான் முதன்முதலில் கடந்த சீசனில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் பிரபலமானதை அடுத்து லாஸ்லியா கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
 
இப்படியான நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் அவர் வேலை பார்த்து வந்த கனடா நாட்டிலேயே மாரடைப்பு வந்து கடந்த 15ம் தேதி இறந்துவிட்டார். இதையடுத்து இந்தியாவில் இருந்த லாஸ்லியா உடனடியாக இங்கிருந்து இலங்கைக்கு கிளம்பி சென்றுள்ளார். 
 
ஆனால், அங்கு அவர் தனது அம்மா மற்றும் தங்கைகளை பார்க்கமுடியாத அளவிற்கு குவாரன்டைனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இறந்த தந்தை முகத்தையும் குடும்பத்தினரையும் பார்க்கமுடியாமல் லாஸ்லியா பெரும் துயரத்தில் இருந்து வருவதாக செய்திகள் கூறுகிறது. லாஸ்லியா இப்படி ஒரு நிலையில் இருப்பதை அறிந்த ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்