திருப்பாச்சி விஜய் தங்கச்சியின் அல்ட்ரா மாடர்ன் புகைப்படம்!

சனி, 23 ஜனவரி 2021 (16:26 IST)
நடிகை மல்லிகா தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை நீண்ட நாட்களுக்குப் பின்னர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை மல்லிகா சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு விஜய் நடித்த திருப்பாச்சி திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து அனைவரின் பாரட்டையும் பெற்றார். ஆனால் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வராத நிலையில் பின்னர் சொந்த ஊரான கேரளாவுக்கே சென்று செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் இப்போது அவர் அலட்ரா மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை நீண்ட நாட்களுக்குப் பின்னர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்