இந்தி கற்றுக்கொள்வதில் தவறில்லை - விஜய் பட இயக்குநர்

வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (15:47 IST)
அவசியம் இருந்தால் இந்தி கற்றுக்கொள்வதில் தவறில்லை என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் விமான நிலையத்தில் தன்னை சிஐஎஸ்எப் ஊழியர் ஒருவர் இந்தியரா? என கேட்டதாக திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டரில் பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இனிமேல் விமான நிலையங்களில் உள்ளூர் மொழி தெரிந்த சிஐஎஸ்எப் வீரர்களை மட்டுமே பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்போவதாக சிஐஎஸ்எப் டிஐஜி அனில்பாண்டே வர்கள் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழி அவர்களிடம் ‘உங்களுக்கு இந்தி தெரியாதா? நீங்கள் இந்தியரா? என சிஐஎஸ்எப் வீராங்கனை ஒருவர் கேட்டதாக வெளிவந்த தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியது இது குறித்து பல அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்தனர்

மேலும் பயணிகளின் உணர்வுகளை மதித்து கண்ணியத்துடன் வீரர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி போன்ற படங்களை இயகிய இயக்குநர் பேரரசி, இந்தியனாய் இருப்பதற்கு இந்தி தெரிய வேண்டிய அவசியமில்லை; அவசியம் இருந்தால் இந்தி கற்றுக் கொள்வதில் தவறில்லை எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்