மீண்டும் ஒரு தென்னிந்திய படத்தில் அமிதாப் பச்சன்…!

vinoth

திங்கள், 8 ஏப்ரல் 2024 (08:21 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண். இவர்  இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. தற்போது,  அவர் ஷங்கர் இயக்கத்தில் கேம்சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய்யின் வாரிசு படத் தயாரிப்பாளர் தில்ராஜூ  தயாரித்து வருகிறார். இந்த படம் நீண்டகாலமாக உருவாக்கத்தில் உள்ளது.

இதையடுத்து ராம்சரண் உப்பென்னா படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தற்போது RC16 என அழைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் இணைந்துள்ளார். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் அமிதாப் பச்சன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஜெயிலர், கல்கி AD 2898 ஆகிய படங்களில் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்