அட்லீ தயாரிப்பில் விஜய்சேதுபதி?

sinoj

புதன், 3 ஏப்ரல் 2024 (22:30 IST)
தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர் அட்லீ. இவர், ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
 
இவர் இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஜவான். இப்படம், பாலிவுட் சினிமாவில் வசூல் சாதனை படைத்தது. 
 
அவர் இயக்கிய முதல் இந்திப் படமே ரூ.1000 கோடி வசூலீட்டியதால் , அவர் மீது இந்தி ஹீரோக்கள் பார்வை திரும்பியுள்ளது. அடுத்து யாரை இயக்கப் போகிறார்? யார் தயாரிப்பது என்ற கேள்வி எழுந்தது.
 
அதன்படி, அட்லீ அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் தெலுங்கு முன்னணி ஹீரோ அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ளார்.
 
இந்த நிலையில், அட்லீ நீண்டநாள் கழித்து தன் சொந்த பேனரில் ஒரு படம் தயாரிக்கவுள்ளதாக தகவல்  வெளியாகிறது.
 
இப்படத்தை அட்லீயின் பேனர் சொந்தப் படமாக உருவாக உள்ளதால் இப்படத்தில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
 
இப்படம் பற்றி விஜய்சேதுபதியுடன் அட்லீ அடிக்கடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இப்படம் பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.விஜய்சேதுபதியும் அட்லீயும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 
 
இதனால் அட்லீ மற்றும் விஜய்சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்