பாகுபலி படத்தில் சூர்யா நடிக்க இருந்த கதாபாத்திரம் இதுதான்… ஆனால் ஜஸ்ட் மிஸ்!

வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (11:28 IST)
பாகுபலி படம் தென்னிந்திய சினிமாவை உலகளவில் தூக்கி நிறுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.

பாகுபலி மூலமாக பேன் இந்தியா நடிகராக மாறிய பிரபாஸ் இப்போது இந்தியா மொத்தத்துக்கும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இதனால் அவர் நடிக்கும் படங்களின் பட்ஜெட் 500 கோடிக்கு மேல் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சூர்யா ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்து அது கடைசி நேரத்தில் நடக்க முடியாமல் போனது.

கிச்சா சுதீப் நடித்திருந்த பாத்திரத்தில்தான் சூர்யாவை நடிக்க சொல்லி ராஜமௌலி கேட்டிருந்தாராம். ஆனால் கால்ஷீட் காரணமாக சூர்யாவால் அப்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியவில்லையாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்