சீரியல் நடிகர்கள் ஒன்றுசேர்ந்து நடிக்கும் திரைப்படம்!

வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (15:45 IST)
நடிகர் பரத் மற்றும் ஜனனி ஐயர் நடிக்கும் புதிய படத்தில் சீரியல் நடிகர்கள் பெரிய அளவில் நடிக்க உள்ளனர்.

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் என்ற பேனரின் கீழ் பல பிரபலமான படங்களை தயாரித்து வருபவர் ரவீந்தரன். இவர் சமீபத்தில் நடிகை வனிதாவுடன் மோதலில் ஈடுபட்டு பிரபலமானார். இப்போது ஒரு யுடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் பரத் மற்றும் ஜனனி ஆகியோரை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். முன்னறிவான்' எனப்பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விஜயராஜ் இயக்குகிறார்.

சைக்கலாஜிக்கல் த்ரில்லர் வகையில் உருவாகும் இந்த படத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்களில் தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பவர்கள் நடிக்க உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்