’ஆட்டோகிராப்’ 17 வருடங்கள்: சேரனின் நெகிழ்ச்சியான டுவீட்

வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (12:32 IST)
’ஆட்டோகிராப்’ 17 வருடங்கள்: சேரனின் நெகிழ்ச்சியான டுவீட்
பிரபல இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய ’ஆட்டோகிராப்’ திரைப்படம் கடந்த 2004ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி வெளிவந்தது. இந்த திரைப்படம் வெளியாகி 17 வருடங்கள் ஆனதை அடுத்து இதுகுறித்து இயக்குனர் சேரன் நெகழ்ச்சியான ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
 
17 வருடங்கள் ஆனாலும் இன்னும் ஆட்டோகிராப் திரைப்படத்தை புதிய படமாக ரசித்துப்பார்க்கும் ரசிகர்களுக்கும், ஆட்டோகிராப் சாயலில் வரும் புதிய படங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் விமர்சகர்களுக்கும் பத்திரிக்கை, ஊடக மற்றும் வளைதள நண்பர்களுக்கும் நன்றி.. 
 
சேரன், சினேகா, கோபிகா, மல்லிகா உள்பட பலர் நடித்த இந்தப்படத்தை படத்திற்கு பரத்வாஜ் இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பா.விஜன் எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடல் தேசிய விருதைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த திரைப்படம் தெலுங்கு கன்னடம் மற்றும் பெங்காலி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் அந்த மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்