இந்திய அணியை வழிநடத்தும் திறமை ஸ்ரேயாஸ் ஐயருக்கு இருக்கிறது – ஆஸ்திரேலிய அணி கீப்பர் பதில்!

செவ்வாய், 17 நவம்பர் 2020 (16:45 IST)
டெல்லி கேப்ப்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியை வழிநடத்தும் திறமை உள்ளதாக அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார்.

டெல்லி அணியின் இளம் வீரராக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த ஆண்டு இந்திய அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதுமுதல் அந்த அணி அபாரமாக செயல்பட்டு இந்த ஆண்டு இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றுள்ளார்.  இந்த நிலையில் அவர் இந்திய அணிக்கு விரைவில் கேப்டனாக ஆகக் கூடிய தகுதி இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதுபற்றி பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ‘ ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சிறப்பான கேப்டனாக முன்னேறப் போகிறார் என்று நான் நினைக்கிறேன். அணியில் உள்ள அனைத்து வீரர்களுடனும் இணைந்து வழிநடத்தும் அவரது திறன் அருமையாக இருந்தது. அவர் தன்னையும் கவனித்துகொண்டு அணியில் உள்ள வீரர்களை பற்றியும் கவலைப்படுகிறார். விளையாட்டு குறித்த அவரது நேர்மறையான அணுகுமுறை நன்றாக வேலை செய்தது.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்