இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடுவாரா பாட் கம்மின்ஸ்!

செவ்வாய், 17 நவம்பர் 2020 (16:02 IST)
இந்தியாவுக்கு எதிராக இந்த மாதம் தொடங்க உள்ள ஒருநாள் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் விளையாடுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதில் ஒருநாள் மற்றும் டி 20 அணிகளில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அதே போல டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று போட்டிகளில் கேப்டன் கோலி இடம்பெறவில்லை. வரும் 27 ஆம் தேதி ஒருநாள் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் இந்திய வீரர்கள் இப்போது தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஒருநாள் தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போதுதான் ஐபிஎல் தொடருக்காக 3 மாத காலம் பயோபபுளில் இருந்துள்ள கம்மின்ஸ் மீண்டும் இந்திய அணியுடனான நீண்ட தொடருக்காக மீண்டும் பயோ பபுளில் உடனடியாக வரவேண்டும் என்பதால் அதுகுறித்து ஆலோசனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்