விஜய் ஹசாரே கோப்பையில் இரட்டை சதம் அடித்து கலக்கிய பிருத்வி ஷா!

வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (10:44 IST)
நடந்து வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மும்பை அணியைச் சேர்ந்த பிருத்வி ஷா இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதமடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர் பிருத்வி ஷா. அதன் பிறகு அவர் பயன்படுத்திய சுவாசப் பிரச்சனைக்கான சிரப்பில் தடை செய்யப்பட்ட பொருள் இருப்பதாகக் கூறி ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டார். தடை நீங்கி நியுசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடினார். ஆனால் ஆஸி தொடரில் சொதப்பியதால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதனால் இப்போது மும்பை அணிக்காக விஜய் ஹசாரே கோப்பை தொடரில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் புதுச்சேரி அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்துக் கலக்கியுள்ளார்.  தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரித்வி ஷா 152 பந்துகளில் 257 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். விஜய் ஹசாரே கோப்பையில் வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்