அபாயகரமான 7 மாநிலங்கள் - அதிகரிக்கும் கொரோனா பரவல்!!

வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (09:04 IST)
இந்தியாவில் 7 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

 
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் 7 மாநிலங்களில் 89 சதவித பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இந்த மாநிலங்களில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், மத்திய பிரதேசம், தமிழகம், குஜராத், சத்தீஸ்கர் அடங்கும். 
 
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,577 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச கொரோனா பரவல் மகாராஷ்டிராவிலும் கேரளாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்