பாஜக சித்தாந்தமே சரிவரும்: திராவிடத்தை தூக்கி எறிந்த வி.பி.துரைசாமி!

வெள்ளி, 22 மே 2020 (09:53 IST)
பாஜகவின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டால்தான் நாட்டை காப்பாற்ற முடியும் என வி.பி.துரைசாமி பேட்டியளித்துள்ளார். 
 
தமிழக பாஜக தலைவரான எல்.முருகனை திமுக துணை பொதுச் செயளாலர் வி.பி.துரைசாமி சந்தித்தார். இதனால், பாஜகவில் துரைசாமி சேரப்போவதாக தகவல் வெளியானது. 
 
இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த விபி துரைசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின், தன் அருகில் இருப்பவரின் சொல் கேட்டு செயல்படுவதாக கூறினார். அவருடைய இந்த பேட்டி திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இதனைத்தொடர்ந்து விபி துரைசாமியிடம் இருந்த துணை பொதுச்செயலர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக அந்த பதவிக்கு அந்தியூர் செல்வராஜ் எம்.பி.,க்கு வழங்கப்பட்டதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 
 
திமுக தலைமையின் இந்த செயல் குறித்து, வி.பி.துரைசாமி கூறுகையில், பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்று தான் என்றும், இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. பாஜகவின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டால்தான் நாட்டை காப்பாற்ற முடியும். 
 
எனவே பாஜகவின் கொள்கைகளை ஏற்றே அக்கட்சியில் இணைகிறேன். தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து கட்சியில் இணைகிறேன். அதோடு திமுகவின் அடிமட்ட தொண்டன் பொறுப்பில் இருந்து என்னை நீக்குமாறு தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளேன் என வி.பி.துரைசாமி கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்