பாஜகவில் இணைகிறார் வி.பி. துரைசாமி: தமிழக அரசியலில் பரபரப்பு

வெள்ளி, 22 மே 2020 (07:57 IST)
பாஜகவில் இணைகிறார் வி.பி. துரைசாமி
நேற்று திமுக துணைப் பொதுச்செயலாளர் என்ற பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட விபி துரைசாமி இன்று பாஜகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
தமிழக பா.ஜ., தலைவராக சமீபத்தில் எல்.முருகன் நியமிக்கப்பட்ட நிலையில் அவரை சமீபத்தில், தி.மு.க., துணை பொதுச் செயலர், வி.பி.துரைசாமி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனால், பா.ஜ.,வில், துரைசாமி சேரப்போவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த விபி துரைசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின், தன் அருகில் இருப்பவரின் சொல் கேட்டு செயல்படுவதாக கூறினார். அவருடைய இந்த பேட்டி திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று மாலை விபி துரைசாமியிடம் இருந்த, துணை பொதுச்செயலர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக அந்த பதவிக்கு அந்தியூர் செல்வராஜ் எம்.பி.,க்கு வழங்கப்பட்டதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்
 
இதுகுறித்து, வி.பி.துரைசாமி கூறுகையில், ''பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்று தான் என்றும், இதில் ஆச்சரியம் எதுவுமில்லை என்றும், நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தனக்கு ஏற்கனவே தெரியும் என்றும் தி.மு.க.,வில் தனக்கு எதிராக சிலர் சதி செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் இன்று  காலை 9.30 மணிக்கு தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்திற்கு சென்று பாஜகவில் இணைகிறார் என்ற செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்