சர்ச் வாசலில் துண்டிக்கப்பட்ட இளைஞரின் தலை: மதுரையில் பரபரப்பு

திங்கள், 16 நவம்பர் 2020 (11:37 IST)
மதுரையில் சர்ச் வாசலில் துண்டிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் தலை இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
மதுரையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கீழவீதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை காரில் வந்த ஒரு கும்பல் ஓட ஓட அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த சம்பவத்தில் வெட்டப்பட்ட ஒரு இளைஞரின் தலையை துண்டித்து அருகில் இருந்த சர்ச் அருகே தூக்கி எறியப்பட்டு உள்ளது சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்துள்ளது. இளைஞரின் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டவர் பெயர் முருகானந்தம் என்றும் இவர் மீது பல கொலை கொள்ளை வழக்குகள் இருப்பதாகவும் காவல்துறையினர் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இந்த நிலையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த காரில் வந்த மர்ம கும்பலை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்