பொறியியல் படிப்பில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது - AICTE

வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (15:22 IST)
தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி முடிவை அகில இந்திய தொழில் நுட்பக் கழகம் ஏற்க மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இந்தியாவில் கொரொனா பரவல் தாக்கம்  அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகள்,  பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் எப்போது தொடங்கும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இறுதியாண்டு  பல்கலை, கல்லூரி மாணவர்களைத்தவிர அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் அறிவித்தார். இதற்கு கல்வியாளர்கள் விமர்சனம் தெரிவித்தாலும்கூட மாணவர்கள் குஷி அடைந்து, முதல்வருக்குப் போஸ்டர் ஒட்டிக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பொறியியல் படிப்பில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக  தமிழக அரசு அறிவித்துள்ள முடிவை ஏற்க முடியாது என  அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளீயாகிறது

இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
இது மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்