வெளிமாநில தொழிலாளர்களின் பயண செலவை நாங்களே ஏற்கிறோம் – தமிழக அரசு அறிவிப்பு!

சனி, 9 மே 2020 (11:41 IST)
தமிழகத்தில் சிக்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான செலவை தமிழக அரசே ஏற்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளி மாநில தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத சூழலில் தவித்து வந்தனர். இந்நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வெளிமாநில தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவது குறித்து சம்பந்தபட்ட மாநில அரசுகள் முடிவெடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு ரயில்கள் மூலம் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ஒருவேளை சம்பந்தபட்ட மாநிலங்கள் தொழிலாளர்களுக்கு பயணம் செய்வதற்கான செலவை செய்ய மறுக்கும்பட்சத்தில் அவர்களுக்கான பயண செலவை தமிழக அரசே ஏற்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்